வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் பேசியதாகவும், அவர் மெது ஏற்கனேவே 24 வழக்குகள் உள்ளதையும் காரணம் காட்டி அவரை கைது செய்த அதிகாரிகள், வேலூர் சிறையிலடைத்தனர்.
அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சிறையில் திருமுருகன் காந்தி பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவியது. இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அவர் கடந்த 10 நாட்களாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனையப்பட்ட இந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க இருபதாக மே-17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.