திருப்பூர் : பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் குற்றப்பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட கள்ளர், மறவர், சேர்வை, வலையர் உள்ளிட்ட 68 சாதியினரை தனிப் பட்டியலில் வைத்து 1,979 வரை டி நோட்டிபைடு டிரைப்ஸ் (DNT) என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம், உயர் கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு டி நோட்டிபைடு கம்யுனிட்டி என சாதி சான்றிதழ் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், தங்களுக்கு பழைய முறையிலேயே சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சீர் மரபினர் நலச்சங்கத்தின் தலைவர் வள்ளிக்கண்ணு என்பவர் கே.டிகே. தோட்டம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மத்திய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதனையடுத்து, அவரைக் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.