கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: அமராவதி அணை பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர்: அமராவதி அணை பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான அமராவதி அணை பகுதியில் பெய்து வரும் கன மழையால் நீர்மட்டம் விரைவாக அதிகரித்து வருகின்றது. கேரளா மாநிலம் மூணாறு, மறையூா், சின்னாறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதும் அணைக்கு நீர்வரத்து அதிகாரிக்க காரணமாக உள்ளது.



உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் பகுதி விவசாயிகள் தற்போது முதல்போக நெல் நடவு செய்து, இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறையாமல், வருகின்ற நீர்வரத்தை அப்படியே விவசாயத்திற்குப் பயன்படுத்தினால் இரண்டாம் போகமும் நெல் சாகுபடி செய்ய தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



தற்போது அணையில் 77.27 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 581 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் விவசாயத்திற்காக அமராவதி ஆற்றில் 609 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...