திருப்பூர்: அமராவதி அணை பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான அமராவதி அணை பகுதியில் பெய்து வரும் கன மழையால் நீர்மட்டம் விரைவாக அதிகரித்து வருகின்றது. கேரளா மாநிலம் மூணாறு, மறையூா், சின்னாறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதும் அணைக்கு நீர்வரத்து அதிகாரிக்க காரணமாக உள்ளது.

உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் பகுதி விவசாயிகள் தற்போது முதல்போக நெல் நடவு செய்து, இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறையாமல், வருகின்ற நீர்வரத்தை அப்படியே விவசாயத்திற்குப் பயன்படுத்தினால் இரண்டாம் போகமும் நெல் சாகுபடி செய்ய தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது அணையில் 77.27 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 581 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் விவசாயத்திற்காக அமராவதி ஆற்றில் 609 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.