திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.
திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்விற்காக அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெற்ற ஸ்ரீ நடராஜப் பெருமானை வேண்டி வலியுறுத்தி மண்பானை மீது நாட்டியமாடும் நிகழ்ச்சி அவிநாசியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீ பிருந்தாவன் கலாச்சேத்ராவின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 321 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பானை ஏறி நின்று மீது நடனமாடினர்.

ஐந்து நிமிடங்கள் மண்பானை மீது நடனமாடி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதில், 310 பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டியம் ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால், கடந்த 2009-ம் ஆண்டு ஐதராபாத்தில் 50 பேர் மண்பானை மீது பரத நாட்டியமாடி ஆசிய சாதனை முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டதாக ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அறிவிக்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்ச்சியைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
