புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பாலமலை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பாலமலை அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பாலமலை அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் வனத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரங்கநாதருக்கு துளசி மாலையை சாத்தி வழிபாடு நடத்தினர். அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அரஙாகநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பக்தர்கள் அரங்கனுக்குப் பிடித்த துளசி மாலைகளை கொண்டு வந்து சுவாமிக்கு சாற்றி வழிபாடு நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் இன்று ஒரு நாள் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு, அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...