உதகை அருகே தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம்

நீலகிரி : உதகை அருகே தடுப்புச் சுவர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.


நீலகிரி : உதகை அருகே தடுப்புச் சுவர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

முக்கி மலையிலிருந்து மஞ்சூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை லோகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இந்தப் பேருந்து மஞ்சூர் அருகே உள்ள குந்தா பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி வலது பக்கம் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. 

இதில் பேருந்தில் பயணித்தவர்களில் பழனிசாமி (60), சண்முகம் (65), லோகராஜ் (43), லட்சுமி (60), வத்சலா (50), லட்சுமி (75) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு மஞ்சூர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்த சம்பவம் குறித்து பேருந்தில் பயணித்த பயணிகள் கூறும்போது :- முக்கி மலையில் புறப்பட்டதில் இருந்தே பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்தது. விபத்து நடந்த இடத்தில் வலது பக்கத்திற்கு பதிலாக இடது பக்கம் விழுந்திருந்தால் ஏறக்குறைய 250 அடி ஆழத்தில் உள்ள குந்தா அணையில் விழுந்திருக்கும். 

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...