கோவை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரணவம்பட்டி பகுதி அருகே செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ்., கல்லூரியில் தலைமை இயக்குநராக சுப்ரமணியன் (65) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவரது தொல்லையை பொறுக்க முடியாத பல பெண்கள் வேலையை விட்டும் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து, நண்பர்கள் உதவியுடன், பாலியல் தொல்லை கொடுக்கும் நிர்வாக இயக்குனரை மறைமுக கேமிராக்கள் உதவியுடன் படம் பிடித்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவருக்கான பணியை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.