திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் எச். ராஜா மீது இந்து சமய அறநிலையத்துறையினர் புகார் மனு

திருப்பூர் : அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனைக் கண்டித்து திருப்பூர் உதவி ஆணையர் எஸ்.வி. ஹர்சினி தலைமையில் கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.



இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது :- எச். ராஜா அறநிலையத்துறையின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைந்து அநாகரீகமான முறையில் அரசு அலுவலர்களாகிய எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் உச்சமாக அன்றைய பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்தும், குடும்பத்தில் உள்ள பெண்களின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் பேசி உள்ளார். 



ஆகவே. எச்.ராஜா மீது பெண்களை இழிவுப்படுத்துதல், அரசு அலுவலர்களை தரக்குறைவாக இழிவாகப் பேசுதல், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...