கோவையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

கோவை: அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த நர்சிங் மாணவி நேற்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த நர்சிங் மாணவி நேற்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகள் மாலதி (21). இவர் அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல பயிற்சிக்கு சென்ற மாணவி நேற்று மாலை திடீரென அறையில் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார். 

இதைக் கண்ட சக மாணவிகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும், இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பீளமேடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மாணவியின் மரணம் குறித்த தகவல் காலதாமதமானது ஏன்? என உறவினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், நிர்வாகத் தரப்பில் சரியான பதில் வராததால் நிர்வாகத்திற்கும், உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து. போலீசார் மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும், மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...