அத்திப்பாளையம் அருகே தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து : 3 மணிநேரம் போராடி தீயணைப்பு

கோவை: கோவை : சின்னவேடம்பட்டியை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர்அணைத்தனர்.


கோவை: கோவை : சின்னவேடம்பட்டியை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர்அணைத்தனர்.



சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டி அருகே அத்திபாளையம் சாலையில் எஸ்.ஆர் ரெசின்ஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதில், எஸ்.ஆர்.ரெசின்ஸ் அண்டு கெமிக்கல் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதுடன் உடனடியாக‌ தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர்‌. அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். 



இந்த தீவிபத்தின் முதற்கட்ட விசாரணையில் ரசாயன ஆலையின் உரிமையாளர்கள் காரைக்குடியை சேர்ந்த ஆனந்த், ரமேஷ் உட்பட நான்கு பேர் என தெரியவந்துள்ளது. அதேபோல, மின்கசிவின் காரணத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்நிலைய போலீசார் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...