கோவை: கோவை : சின்னவேடம்பட்டியை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர்அணைத்தனர்.
கோவை: கோவை : சின்னவேடம்பட்டியை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர்அணைத்தனர்.

சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டி அருகே அத்திபாளையம் சாலையில் எஸ்.ஆர் ரெசின்ஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதில், எஸ்.ஆர்.ரெசின்ஸ் அண்டு கெமிக்கல் நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதுடன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தின் முதற்கட்ட விசாரணையில் ரசாயன ஆலையின் உரிமையாளர்கள் காரைக்குடியை சேர்ந்த ஆனந்த், ரமேஷ் உட்பட நான்கு பேர் என தெரியவந்துள்ளது. அதேபோல, மின்கசிவின் காரணத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்நிலைய போலீசார் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.