திருப்பூர் : திருப்பூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருப்பூர் மாநகராட்சியின் 28-வது வார்டு அ.தி.மு.க., இளைஞரணி செயலாளராக உள்ளார். உணவகம் நடத்தி வரும் இவர், அப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்துள்ளார். மேலும், சிலரிடம் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
கடந்த திங்களன்று மதியம் அவரை கொங்கு மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த இளங்கோவை தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திருநீலகண்டபுரம் 2-வது வீதி அருகே வைத்து சரமாரியாக ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இளங்கோ, அதிகளவு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த திருப்பூர் வடக்கு போலீசார், கொலை குற்றத்தில் ஈடுபட்ட செந்தமிழன், கோபி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜே.எம்.,4-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான தாமோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.