கோவை: போதை பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்ததை உறுதி செய்த நீதிபதி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஜக்ரியா, தனியார் மருத்துவமனை மருத்துவர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, மன்சூர் உட்பட சிலர்
உதவியுடன் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியை விடுவிக்க வலிப்பு நோய் இருப்பதாக போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேகமடைந்த நீதிபதி சான்றிதழ் குறித்த ஆய்வில் குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவர்கள் போலியான சான்றிதழ்களை அளித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவர்கள் மீது போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் வழக்கினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிந்து கொண்டு குற்றத்திற்கு உடந்தையாக சட்ட விரோதப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதை பயன்படுத்திக்கொண்டு பணத்திற்காக காட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டு தவறான வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இப்படி குற்றங்களில் துணைநிற்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எளிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.