கோவை : 'ஸ்வச்சதா ஹி சேவா' திட்டம் 15-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் பிரதமர் மோடியுடன் மாதா அமிர்தானந்தாமயி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டங்களில் ஒன்றான 'ஸ்வச்சதா ஹி சேவா' திட்டம் வரும் 15-ம் தேதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை மாதா அமிர்தானந்தாமயி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வு, தூர்தஷன் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிர்தரபுரி மாதா அமிர்தானந்தாமயி மடத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட இருக்கின்றனர். மேலும், இந்த மடத்தைச் சேர்ந்த பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரமங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அமிர்தரபுரி மடத்தின் அருகே சுமார் 6 கி.மீ., தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் இத்திட்டப் பணிகள் நடக்கவிருக்கிறது.