பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - முதலமைச்சர்

சேலம்: பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்: பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, "பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு சிந்திக்கும். வரியைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டு.

திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., பணம் எதுவும் கொடுக்கவில்லை. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம், அப்படிப்பட்ட நிலையில் அ.தி.மு.க., செயல்படாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது.

குட்கா ஊழல் தொடர்பாக ஒருவர் மீது வெறுமனே குற்றச்சாட்டுகளை அடுக்குவதனால் அவர் குற்றவாளியாகிவிட முடியாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டும். எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. காவிரியில் கர்நாடக அரசு மேலும் ஒரு அணை கட்டினால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். மேகதாது அணை விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்போம்." என்று அவர் தெரிவித்தார்.

தற்போது ராஜஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து, லிட்டருக்கு ரூ.4 குறைத்துள்ளது. அதைப்போல் ஆந்திரா மாநிலத்திலும் வாட் வரி குறைக்கப்பட்டு, லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...