கோவை : பெண் பத்திரிக்கையாளரை தகாத வார்த்தையில் திட்டிய கே.சி.பி., என்ஜினியரிங் உரிமையாளரும், ஒப்பந்ததாரமான சந்திரசேகருக்கு கோவை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மீது டைம்ஸ் நவ் என்ற தனியார் தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சில ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. மேலும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கோவைப் பதிப்பில் வெளியான செய்தியை எழுதிய பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதமை அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் மிரட்டல் விடுத்தும் உள்ளனர்.
இதனிடையே, இது தொடர்பாக செய்தியை வெளியிட்ட சென்னையைச் சேர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் நிருபர் கோமல் கவுதமை
கே.சி.பி., என்ஜினியரிங் உரிமையாளர் சந்திரபிரகாஷ் தகாத வார்த்தைகளில் திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், கோவையில் கோமல் கவுதம் பணியாற்றிய போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டும் சந்திரபிரகாஷ் பேசியுள்ளார்.
இந்த நிலையில், பெண் பத்திரிக்கையாளரை தகாத வார்த்தையில் திட்டிய கே.சி.பி., என்ஜினியரிங் உரிமையாளர் சந்திரசேகருக்கு கோவை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பத்திரிக்கையாளரை பணி செய்ய விடாமல் செய்ததற்கும், தகாத வார்த்தையில் பத்திரிக்கையாளரை திட்டியதற்காகவும் ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.