கோவை : கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் மரங்களுக்கு இடையே தலை சிக்கிக் கொண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆனைகட்டி அருகே கூட்டுப்புளிக்காடு பகுதியில் உள்ள அரசு பழத்தோட்ட பண்ணைக்கு அருகாமையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இதில், 16 வயதுக்கும் குறைவான பெண் யானை ஒன்று, நிலைதடுமாறி மரங்களின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதன் தலை மரங்களுக்கு நடுவே சிக்கியுள்ளது. எவ்வளவு முயற்சி செய்தும் அந்த யானையால் தலையை வெளியே எடுக்கமுடியவில்லை. இதனால், அந்த யானை நின்றவாறே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து அறிந்த பொதுமக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனப்பகுதியிலேயே தகனம் செய்தனர். இதனிடையே, மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த யானையின் துதிக்கையை காட்டு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் தின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.