கோவை: ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலையீட்டால் ஒட்டுனர்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் டாடா மேஜிக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஸ்டாண்டில் அவ்வப்போது ஏற்படும் சிறு பிரச்சனைகளை சங்கத்தினர் சுமூகமாக பேசி தீர்த்து வரும் நிலையில், வழக்கமாக இருக்கும் ஆட்கள் அல்லாது வெளி ஆட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து இடையூறு செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாகத் தெரிகிறது.
மேலும், ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையுடன் அங்கு தகராறு செய்து வரும் வெளி ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், புதிய ஆட்கள் ஆட்டோக்களை அங்கு நிறுத்தக் கூடாது என்று கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கின் தலையீடு உள்ளதாகவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் ஆட்டோக்களை நிறுத்த மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்தி மனு அளித்தனர்.