சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக, ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்படும். அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதனை ஆளுநர் ஏற்க சட்டம் வலியுறுத்துகிறது. இதனை ஆளுநர் தாமதப்படுத்தவோ அல்லது மத்திய அரசிடம் ஆலோசனை என்கிற பெயரில் காலம் தாழ்த்தவோ வழியில்லை.
அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எனவே 7 பெரும் விடுதலை செய்யப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.