கோவை: சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைத்தன்மை குறித்த ஆய்வு முடிவுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஜெயபால் நேற்று வெளியிட்டார்.

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் நர்சிங் ஹோம் போர்டு இணைந்து சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைப்பாடு குறித்த ஆய்வு நடத்தினர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சேர்மேன் டாக்டர்.ரவிக்குமார் கூறுகையில், "பல்வேறு சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகள் இன்று நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களால் பெரிய கார்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டியிட முடிவது இல்லை.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, தரமான மருத்துவ சேவை பெற எத்தனை செலவு ஆகும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் படி மருத்துவமனைகள் செயல்பட்டால், 45 சதவீத மக்களுக்கு அது பயன்படும். ஆனால், பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் மக்கள் குறைவார்கள். இதனால், மானிய விலையில் மருத்துவம் வழங்க சிரமம் உண்டாகும்.

இதன்படி, பெரிய அளவிலான கார்பரேட் மருத்துவமனைகளைத் தவிர மற்ற சிறிய மருத்துவமனைகள் முழுமையாக பாதிக்கப்படும்." என்றார்.