எங்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை : கோவையில் அமைச்சர் பகீர் பேச்சு

கோவை: பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை: பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எலி காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்துகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கேரள எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழு மூலம் சோதனைகள் செய்து வருகின்றனர். எலி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக கேரள எல்லையில் கால்நடைகளுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. கால் நடைகளை வைத்து இருப்போர் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திற்குள் வரும் கால்நடைகளை பரிசோதனை செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன." என்றார்.

தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும், ஒவ்வொரு துறை அமைச்சரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை கூறி வருகின்றனர்." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...