கோவையில் இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

கோவை: கோவையில் பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை: கோவையில் பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நிறுவன அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அந்நிறுவன உரிமையாளரான இந்துமதிக்கு சொந்தமான வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

சுமார் 7 மணிநேரம் நடந்த சோதனைக்கு பின் அங்கிருந்து இரண்டு பிளாஸ்டிக் பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...