கோவை: மேட்டுப்பாளையம் அருகே கரையை ஆக்கிரமித்து போடப்படும் சாலையால் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமை வாய்ந்த குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த முகலாயர் ஆட்சி காலத்தில் திப்புசூல்தான் கட்டிய குளம் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் நீரினை ஆதாரமாகக் கொண்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கரையின் மறுபுறத்தில் பெள்ளாதி கிராம மக்களின் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

இந்த நிலையில், இந்த குளத்தில் கரையை ஆக்கிரமித்து சிலர் இன்று ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் கரையை குடைந்து சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில தனியாரின் நலனுக்காக குளத்தின் கரையை ஆக்கிரமித்து போடும் இந்த சாலையால், உறுதித்தன்மை இழந்து கரை உடையும் நிலை உருவாகும் எனக் கூறிய அப்பகுதி மக்கள், இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தனர்.

ஏற்கனவே, முக்கொம்பு உள்ளிட்ட பழமையான அணையின் கரைகள் உடைந்து வருவதால், இதுபோன்ற பழமையான குளங்களின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இதனை தடுக்கத் தவறினால் மழை காலங்களில் அணை நிரம்பி கரை உடைந்து கிராமமே தண்ணீரில் மிதக்கும் நிலை உருவாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.