குன்னூர் - கோத்தகிரி சாலையில் உலா வரும் கரடி கூட்டம் : சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில் உலா வரும் கரடி கூட்டத்தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில்  உலா வரும் கரடி கூட்டத்தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாளுக்கு நாள் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். அதேபோல, தேயிலை தோட்ட விவசாயிகளும் உயிர்பயத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், குன்னூர் - கோத்தகிரி சாலையில் குட்டியுடன் தாய் கரடி அவ்வப் போது சுற்றித் திரிவதும், சாலைகளை கடப்பதுமாக இருந்து வருகிறது. எனவே, இவ்வழியாக வாகனத்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, சாலைகளில் சுற்றித் திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...