மாணவிகளை கடுமையாக தாக்கிய ஆசிரியரைக் கண்டித்து தாராபுரத்தில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



தாராபுரத்தில் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாணவிகளை ஆசிரியை விஜயா என்பவர் குச்சியால் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதில், கைகளில் காயமடைந்த மாணவிகள் மாலையில் வீட்டிற்கு சென்ற பிறகும் வலியால் துடித்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஆசிரியர் விஜயா குச்சியால் தாக்கியதை தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, ரத்த காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கிய ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பெற்றோர் மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...