திருப்பூர்: சாயப் பட்டறைகளிடம் இருந்து நொய்யல் ஆற்றை காக்கத் தவறிய அதிகாரிகளால், மாணிக்காபுரம், காசிபாளையம் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் சாயக்கழிவுகளால் நுரை பொங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரமான திருப்பூரின் பிரதான தொழில் பின்னலாடை உற்பத்தி ஆகும். அதற்காக, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சாய சலவை பட்டறைகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான உற்பத்தி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், சாய ஆலைகளை அடிப்படையாகக் கொண்டே மற்ற உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் நொய்யல் ஆற்றங்கரையில் செயல்பட்டு வரும் ஆலைகள் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவை குறைக்கும் விதமாக, சாயக்கழிவு நீரை சாக்கடை மற்றும் சிறிய ரக குழாய்கள் மூலமாக நேரடியாக நொய்யல் ஆற்றில் கலந்து வருகின்றனர்.
இதனால், நொய்யல் பெயரளவில் மட்டும் தூய்மை என்றும், நிஜத்தில் மாசுபட்டும் வருகிறது. இந்த செயலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், திருப்பூர் நொய்யல் ஆற்றின் மாணிக்காபுரம், காசிபாளையம் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் நுரை பொங்கும் அளவிற்கு சாயக் கழிவுநீர் ஆலைகளால் நீரில் கலக்கப்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.