கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் அரசின் முடிவிற்கு வரவேற்பு

கோவை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் அரசின் முடிவிற்கு கோவையின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் அரசின் முடிவிற்கு கோவையின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

நாட்டில் வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களில் கோவையும் ஒன்றாகும். இங்கு, சுமார் 50,000 சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மேலும், கோவையில் இருந்து 30 சதவீத வாகன உதிரி பாகங்கள் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இவ்வளவு வர்த்தகத்தை உள்ளடக்கிய கோவையை 3 தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கின்றன. குறிப்பாக, திருச்சி சாலை, அவினாசி சாலையில் நிலவும் அதிகளவு வாகன நெரிசல்களால் போக்குவரத்து பயண நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைய வேண்டியது மிகவும் தாமதாகி வருகிறது. குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள விமான நிலையத்திற்கும், மேற்கு பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், கோவை - சேலத்தை இணைக்கும் அவினாசி சாலையை 8 வழிச்சாலையாக மாற்றினால் மேலும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...