திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை சந்திக்கக் கூடாது என கண்டித்ததால் கோவையில் வாலிபர் தற்கொலை

கோவை : திருமணம் நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததைப் பெற்றோர் கண்டித்ததால், வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : திருமணம் நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததைப் பெற்றோர் கண்டித்ததால், வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜூன் (27). வேலை எதுவும் கிடைக்காமல் இருந்த அர்ஜூனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, பெண் பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் அடிக்கடி பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரியவர திருமணத்திற்கு முன்பு பெண் வீட்டிற்கு சென்று வருவதை தவிர்க்குமாறு அர்ஜூனை கண்டித்து உள்ளனர். இதனால், மனமுடைந்த அர்ஜுனன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த, பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அர்ஜூன் உயிரிழந்தார். இது குறித்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...