கோவை: கொங்கு மக்கள் முன்னனி பிரமுகருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் தமிழரசன் மீது கோவை குனியமுத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கொங்கு மக்கள் முன்னனியில் மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 3-ம் தேதி பாலசுப்பிரமணியம் என்பவரது தொலைபேசியில் இருந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் தமிழரசன் பார்த்திபனை என்பவரை அழைத்து கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகவும் , தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரங்களோடு பார்த்திபன் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த தனியரசின் உதவியாளர் தமிழரசன் மீது 294/b மற்றும் 507 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனது இயக்க தலைவர் ஆறுமுகத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.