நடிகர்களையோ, பாசிச சக்திகளையோ நாடாள அனுமதிக்க மாட்டோம் : எம்.எல்.ஏ., தனியரசு

திருப்பூர் : நடிகர்களையோ, பாசிச சக்திகளையோ நாடாள அனுமதிக்க மாட்டோம் என எம்.எல்.ஏ., தனியரசு தெரிவித்தார்.

திருப்பூர் : நடிகர்களையோ, பாசிச சக்திகளையோ நாடாள அனுமதிக்க மாட்டோம் என எம்.எல்.ஏ., தனியரசு தெரிவித்தார்.

திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் காங்கேயம் சாலையில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 



இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி பேசியதாவது :- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய அம்மாவின் அரசுக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை சாதகமாக்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குட்கா விவகாரத்தில் ஊழல் செய்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும். அதில், முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். கருத்துரிமை சகிப்புத்தன்மை, மனிதநேய சிந்தனை இல்லாதவர்கள்தான் பாசிச சிந்தனையோடு அணுகுகிறார்கள். மாணவி சோபியாவின் குரல் என்பது இந்திய மக்களின் மெளன அலையின் சிறு முனகல்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கெதிரான காங்கிரசின் பந்த்தில் கலந்துகொள்வது குறித்து நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு தெரிவிப்போம், என்றார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு பேசுகையில், ” நடிகர்கள் நாடாள வருவதையோ, பாசிச சக்திகள் நாடாள வருவதையோ நாங்கள் அனுமதிக்க விரும்புவதில்லை. சோபியா விவகாரம், குட்கா விவகாரம், ஏழு பேர் விடுதலை குறித்து முதலமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்கவுள்ளோம்,” எனக் கூறினார். 

இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...