தாராபுரம் நகர கூட்டுறவு தேர்தலில் முறைகேடு : அ.தி.மு.க., வெற்றி செல்லாது என்று ஆதாரங்களுடன் முறையிடும் அ.ம.மு.க

திருப்பூர்: தாராபுரம் நகர கூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுக்கள் பதிந்து முறைகேட்டில் ஈடுபட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட அ.ம.மு.க.,வினர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: தாராபுரம் நகர கூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுக்கள் பதிந்து முறைகேட்டில் ஈடுபட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட அ.ம.மு.க.,வினர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் பல்வேறு வன்முறை காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மூன்றாவது முறையாக கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. பிறகு 3-ம் தேதி அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.



இந்த தேர்தல் முடிவுகள் அன்று இரவே அறிவிக்கப்பட்டன. அதில், அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்தும் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அ.தி.மு.க., தி.மு.க., பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கூறிவந்தனர். இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.

இந்த நிலையில், தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு வகையான குளறுபடிகளும், ஒரே நபர்கள் ஐந்துக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது, தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து அ.தி.மு.க., அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...