உக்கடம் பெரியகுளத்தில் அமையவிருக்கும் பூங்கா: எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்வலர்கள்

கோவை: உக்கடம் பெரியகுளத்தின் வடக்கு எல்லையில் கரையின் உயரத்தை குறைத்து அங்கு பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சியும், ஓயாசிஸ் (Oasis) நிறுவனமும் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: உக்கடம் பெரியகுளத்தின் வடக்கு எல்லையில் கரையின் உயரத்தை குறைத்து அங்கு பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சியும், ஓயாசிஸ் (Oasis) நிறுவனமும் ஈடுபட்டுள்ளனர்.

உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் அமையவிருக்கும் இந்த பூங்காவில், மக்கள் அமர்ந்து குளத்தின் அழகை ரசிக்கும்வண்ணம் இருக்கைகள், சைக்கிள் டிராக், கழிவறைகள், செடிகள் போன்றவை அமையவிருக்கின்றன. இந்த சூழலில், குளத்தின் கரையை குறைத்து இப்படியொரு பூங்கா தேவையா என்றும்? இது சூழலியலை பாதிக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

கோவையில் உள்ள குளங்களை பராமரிக்கும் பொருட்டு ஓயாசிஸ் என்ற டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி, செல்வம்பதி, செல்வசிந்தமணி, சிங்காநல்லூர் குளத்தேரி, பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் உள்ளிட்ட எட்டு குளங்களை இந்த நிறுவனம் இனி பராமரிக்க உள்ளது.

அதன் முதற்கட்ட பணியாகவே தற்போது உக்கடம் பெரியகுளத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது இதற்கு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்த குளத்தை தூர்வாரிய சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் கூறுகையில், "இரவு, பகல் பாராமல் இந்த குளத்தை தூய்மைப்படுத்த கோவை மக்கள் பலர் உழைத்துள்ளனர். தற்போது கரை உயரத்தைக் குறைத்து பூங்கா அமைப்பது குளத்தை சேதப்படுத்துவதைப் போல் உள்ளது.

குளத்தின் அழகை ரசிக்க விரும்பும் மக்கள் கரை ஏறி அதனைக் கண்டு ரசிக்கலாம். இதனால், குளத்தைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் வளங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும்." என்றார். 



கரைப்பகுதியின் உயரத்தைக் குறைத்து அதன் மூலம் கிடைக்கும் மண்ணை மீண்டும் குளத்திலேயே கொட்டுவது, தன்னார்வலர்கள் செய்த பணியை வீணடிக்கும் விதமாக உள்ளதாகவும், இதனால், வாலங்குளத்திற்கு அதிக அளவில் நீர் செல்லும் நிலை ஏற்படும் என்றும் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த பணியை தொடங்கும் முன், தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இதனால் குளத்தின் அளவு குறையும் என்றும், குளக்கரையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

குற்றச்சாட்டுகள் குறித்து ஓயாசிஸ் நிறுவனர் ஆகாஷ்-இடம் கேள்விகள் எழுப்பினோம். அவர் கூறுகையில், "இந்த ஒப்பந்தத்தை நாங்கள் அறிவியல் பூர்வமாகவே அணுகினோம். அமையவிருக்கும் பூங்காவால் இயற்கை மற்றும் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.

குளத்தை மாசு இல்லாமல் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். அங்கிருந்து எடுக்கும் மண்ணை குளத்தில் கொட்டவில்லை. மேலும், கரையின் உயரத்தைக் குறைத்து சரிவாக வைக்கிறோம். திட்டம் தொடர்பாக, அதிகாரிகளிடம் பேசுகையில் தன்னார்வலர்களும் இருந்தனர். ஆனால், அப்போது யாரும் கருத்துக்களை கூறவில்லை. மாறாக திட்டம் தொடங்கிய பின்னர் முரண்பாடான கருத்துக்களை கூறுகின்றனர்." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...