காளிங்கராயன் அவினாசி - அத்திகடவு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு : பழைய திட்டத்தின்படி அமல்படுத்தக்கோரி தீர்மானம்

கோவை : மோகன கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைத்த திட்டத்தின்படியே அவினாசி - அத்திகடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்டம் காரமடையில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை : மோகன கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைத்த திட்டத்தின்படியே அவினாசி - அத்திகடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்டம் காரமடையில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளப்பெருக்கு காலங்களில் பவானியாற்றின் உபரிநீரை பயன்படுத்தி காய்ந்து கிடக்கும் குளம், குட்டைகளில் நீர் நிரப்பி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின், தற்போதைய நிலை குறித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் காரமடை பகுதியில் நடைபெற்றது. 



தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் விவசாயிகளின் நலன் கருதி தீட்டப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை, முதலமைச்சர்களாக பதவி வகித்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

மோகன கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழுவினர் பரிந்துரைந்திருந்த திட்ட அறிக்கையின்படி இறுதியாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை தற்போதைய தமிழக அரசு மாற்றி செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இப்புதிய திட்டத்தின்படி பவானியாற்றின் உபரி நீரை எடுக்கவுள்ள இடமான மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகள் விடுபட்டுள்ளன. 

எனவே, ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தின்படியே அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அத்திக்கடவில் இருந்து குழாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் அணைக்கு கொண்டு சென்ற பின்னர், மீண்டும் மேல் பகுதியில் உள்ள விடுபட்ட இடங்களுக்கு மின் மோட்டார் மூலம் கொண்டு தண்ணீர் வரும் என அரசு கூறுவது நடைமுறை சாத்தியமற்றது என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

ஆகவே, பழைய முறைப்படி அனைத்து பகுதிகளும் பயன்பெறும் வகையில், திறந்தவெளி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தங்களது கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில், புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்றும், பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...