கோவை : பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 2-வது நாளாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
கோவை : பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 2-வது நாளாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 143 தொழிலாளர்களைக் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், பிரிக்கால் நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால், எந்தவித உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் நாளை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரிக்கால் நிர்வாகத்தின் தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது :- தொழிற்சங்கள் 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அதனை மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ள நிர்வாகம் தயாராக உள்ளது. பெரும்பான்மையுடைய கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும். ஆனால், தொழிற்சங்கத்தினர் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்தின் பேரில் மீண்டும் பணியமர்த்த நிர்வாகம் தயாராக உள்ளது, என்றார்.

