நீலகிரி : நெலாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 195 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது :- இந்த ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் ஆண்டில் ரூ. 75.60 லட்சம் மதிப்பில் 42 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 8 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ. 75.60 லட்சம் மதிப்பில் 58 பணிகள் நடைபெற்று வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் 14-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 38.43 லட்சம் மதிப்பில் 22 பணிகள் எடுக்கப்பட்டு. அதில் 12 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 4 பணிகள் நடைபெற்று வருகிறது, இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, இம்மக்கள் தொடர்பு முகாமில் 130 பழங்குடியின பயனாளிகளுக்கு சாதி சான்றிதழும், 8 பயனாளிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் சிறுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 3,20,000-க்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், முதியோர், முதிர்கன்னி, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் தலா 1000 வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.50,000 பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
2 பயனாளிகளுக்கு முன்னோடி வங்கி மூலம் சுயதொழில் தொடங்க ரூ.2,40,000-க்கான காசோலையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் ஆக மொத்தம் 195 பயனாளிகளுக்கு ரூ. 6,10,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம் மக்கள் தொடர்பு முகாமில் பொது மக்களிடமிருந்து 120 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.