கோவையில் வரிகளை செலுத்தாத திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு; மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் செய்துவரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு மண்டலம், 22-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கனகதாரா திரையரங்க நிர்வாகத்தினர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரி, குடிநீர் கட்டணம், சொத்து வரி மற்றும் ஆபாரதத் தொகை என மொத்தம் ரூ.25,56,568யை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டு ஒரு மாதம் ஆகியும் திரையரங்கம் சார்பில் பதில் வராததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...