கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதிய ஆணையராக எம். காந்திராஜ் இன்று பதிவியேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகவும் முக்கிய நகராட்சிகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் நகராட்சிக்கென தனி ஆணையர் நியமிக்கப்படாமல், இங்குள்ள நகராட்சி பொறியாளரே ஆணையர் பணியினை கூடுதலாக கவனித்து வந்தனர். பல ஆண்டு காலமாக இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையில், பலகட்ட போராட்டத்திற்கு பின்பு, கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஆணையரும் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இதனால், 6 மாதத்தில் மீண்டும் ஆணையர் பணி காலியானது. மீண்டும் நகராட்சி பொறியாளரே கூடுதலாகப் பணியினை கவனித்து வந்தார்.
தற்போது, மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணி ரூ. 91 கோடி செலவில் தொடங்க திட்டமிட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. இருப்பினும், பணிகள் துவங்கப்படவில்லை. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ஆணையாளர் இல்லாததால், இதுபோன்ற பணிகள் தாமதமாவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தனி ஆணையர் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் புதிய நகராட்சி ஆணையாளராக எம். காந்திராஜ் இன்று முறைப்படி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர், பொதுமக்களின் குறைகளை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.