திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை கல்லூரியில் பயின்று வரும் மாணவரை காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து சகமாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலிபாளையம் பகுதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பின்னலாடை கல்லூரி (நிப்ட்-டி) இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளி மாநிலத்தவர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திருவேங்கடம் எனும் மாணவரை கடந்த மாதம் காரணமின்றி கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவனையும், அவரது பெற்றோரையும் அவமதித்ததாகவும், தகாத வார்த்தைகளால் கல்லூரி நிர்வாகத்தினர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரியின் முதல்வர் தயாளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.