கோவை: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவை நிர்மலா கல்லூரி மாணவிகள் காகித பைகள் தயாரித்துள்ளனர்.

அக்கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை மாணவிகள், வீணான காகிதங்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத காகித பைகளை தயாரித்துள்ளனர்.
"கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகளை உபயோகிப்பது வழக்கமாக உள்ளது. கேன்டீனில் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளும் மாணவர்கள் காகிதப் பைகளையே பயன்படுத்துகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காகித பைகளை மாணவிகள் தயாரித்துள்ளனர். இது மற்ற மாணவிகள் மத்தியிலும் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது " என்றார் அக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் தலைவர் விஜயலட்சுமி பாஸ்கரராவ்.