சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கிய அமைதி பேரணியில் அவரது மகன் அழகிரி தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி வருகிறார்கள். மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

பேரணியில் கலந்துகொள்ள நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அழகிரி, பின்னர் தனியார் ஹோட்டலில் சென்று தாங்கினார். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் பேரணி தொடங்கியுள்ளது.
ஏற்பாடுகள்
பேரணிக்காக சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேரணி நடக்க உள்ள இடங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் இடம்பெற்றுள்ளது. பேரணியில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு குறைவான தொண்டர்களே கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் மற்றும் அழகிரி கருப்பு நிற சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணிக்கான பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.