அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு : குட்கா விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் சோதனை

சென்னை: குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை: குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குட்கா அதிபர் மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.



அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர்.கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...