தடையேதும் இல்லாமல் தன் மகள் கனடா சென்று படிப்பை தொடர வேண்டும், மாணவி சோபியாவின் தந்தை பேட்டி

தூத்துக்குடி : தமிழக பா.ஜ.க.,வுடன் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தால், தனது மகளின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் என மாணவி ஷோபியாவின் தந்தை ஏ.ஏ., சாமி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி: தமிழக பா.ஜ.க.,வுடன் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தால், தனது மகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு இருப்பதாக, மாணவி ஷோபியாவின் தந்தை ஏ.ஏ., சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் நேற்று விமானத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து இளம்பெண் ஷோபியாவின் தந்தை ஏ.ஏ., சாமி சிம்ப்ளிசிட்டிக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 30-ம் தேதி கனடாவில் இருந்து தனது மகள் ஷோபியா சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். அந்த விமானத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இருக்கை எண் 3-ம் அமர்ந்து பயணம் செய்தார். என் மகளுடைய இருக்கை எண் 8 ஆகும். 

விமானம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, என் மகள் 'பாசிசி பா.ஜ.க., ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். இதனால், தமிழிசை சவுந்தரராஜன் அதிர்ச்சியடைந்தார். மேலும், விமான நிலையத்திற்கு நுழைவு வாயில் அருகே வந்த போது, ஏராளமான பா.ஜ.க.,வினரும், தமிழிசையும் மகளை வழிமறித்தனர். அப்போது, பா.ஜ.க., விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், என் மகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், பொறுமை இழந்த தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கேட்டுவிட்டால், வழக்கு தொடர மாட்டோம் என மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தனர். 

ஆனால், என் மகள் (ஷோபியா) தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். மேலும், இது பேச்சுரிமையை பறிக்கும் செயல் எனக் கூறினார். இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், காலை 11.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை என சுமார் 9 மணிநேரத்திற்கும் மேலாக இந்த விவகாரத்தால் அலைக்கழிக்கப்பட்டோம். மேலும், என் மகள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் 505 என்ற பிரிவு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் அந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரினர். ஆனால், நீதிபதி தற்போது இருக்கும் பிரிவுகளே போதுமானது எனக் கூறி அவர்களது கோரிக்கைகளை நிராகரித்தார். 

மேலும், 1,000 தேவேந்திரகுல சமூகத்தினர் பா.ஜ.க.,வில் இணையும் நிகழ்விற்காக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார். நானும் அந்த சமூகத்தையே சேர்ந்தவன். பா.ஜ.க.,வின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தவே, புகார் மனுவில் சாதியை குறிப்பிட்டேன். வாக்குக்காக மட்டுமே பா.ஜ.க., எங்களை பயன்படுத்துகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, ஷோபியாவின் வழக்கறிஞர் அதிசயக்குமார் கூறுகையில்," பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுமையை இழந்ததன் விளைவே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் சற்று சிந்தித்து, பொறுமை காத்திருந்தால் இவ்வளவு பெரிய சம்பவம் ஏற்பட்டிருக்காது. மேலும், அவர் ஷோபியாவை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டார். அவர் ஒரு மாநிலப் பொறுப்பில் இருப்பதை உணர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது," என்றார். 

நேற்று குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 1,000 பேர் பா.ஜ.க.,வில் இணையும் விழாவில் பங்கேற்பதற்காக மாநில பா.ஜ.க., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் ஏ.ஏ.,சாமி என்பவரது மகள் லுாயிஸ் ஷோபியா (23) என்ற இளம்பெண்ணும் பயணித்தார். அப்போது, அந்த இளம்பெண் பா.ஜ.க., விற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் விமானத்தில் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவி ஷோபியா கைது செய்யப்பட்டார். மேலும், பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...