100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்., 9-ல் காத்திருக்கும் போராட்டம்

திருப்பூர் : 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்டோபர் 9-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர் : 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்டோபர் 9-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூரில் கடந்த 2-ம் தேதி முதல்வ இன்று வரை என மூன்று நாட்கள் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 372 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று மாற்றுத் திறனாளிகள் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



இதைத் தொடர்ந்து, இம்மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக மிகப்பெரிய காத்திருக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதோடு, மாற்றுத் திறனாளிகள் 75 சதவிகித கட்டண சலுகை பயணம் உள்ளூர் மற்றும் நகரப் பேருந்துகளில் மறுக்கப்படுவதாக, வரும் செப்டம்பர் 25-ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக மிகப்பெரும் போராட்டம், நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு ஊனமானோருக்கு அரசு வேலை நிவாரணம் வழங்க வேண்டும். பாசிச பா.ஜ.க., அரசு ஒழிக என முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்ட சோபியாவை விடுதலை செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகள் குறை கேட்புக் கூட்டத்தை முறைப்படுத்தி நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்ஸிராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்பட புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...