திருப்பூர்: திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பொதுமக்களிடம் பிடிபட்ட அரியவகை முள்ளெலி, வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

பொங்குபாளையம் பகுதியில் அரியவகை இனத்தை சேர்ந்த முள்ளெலி ஒன்று சாலை ஓரமாக இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அதனை இலவாகமாக பிடித்தனர். பின்னர், இது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் அரிய வகை முள்ளெலியை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது :- முள்ளெலி இனம் அழிந்து வரும் இனமாகும். பொதுமக்கள் இதனை காணும் போது அதற்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட இந்த முள்ளெலியானது ஊத்துக்குளி அருகேயுள்ள கதித்தமலை வனப்பகுதியில் விடப்படும், என்றனர்.