திருப்பூர் : அவிநாசி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அவிநாசியை அடுத்த தெக்கலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது மனைவி காந்திமதி (52), கடந்த இரண்டு வாரமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, அப்பகுதியில் காய்ச்சல் மேலும் பரவாமல் மாவட்ட சுகாதார துறையினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமத்துவபுரம் பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், குப்பை கூளங்களாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாக உள்ளதாகவும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், தற்போது ஒருவர் உயிரிழந்த பின்னரே துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.