கோவை மாவட்ட வனஅதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை செப்டம்பருக்குள் முடிக்க திட்டம்

கோவை : கோவையைச் சேர்ந்த வன அதிகாரி எஸ். கண்ணன் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டு குறித்த விசாரணை இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையைச் சேர்ந்த வன அதிகாரி எஸ். கண்ணன் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டு குறித்த விசாரணை இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஜுலை 23-ம் தேதி மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணன் மீது கோவை மாவட்ட வன அலுவலரிடம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லாமல், மாவட்ட வன அலுவலர் வட்டத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ளும் வகையிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன. வன அதிகாரி மீதான புகார் குறித்து விசாரிக்க கோவை மாவட்ட வன கண்காணிப்பாளர் ஆர். கலாமணி மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா, பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக தனக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற, வன அதிகாரி எஸ். கண்ணனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அவர், கடந்த 23-ம் தேதி மேலதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். 

அதற்கு கிடைத்த பதில் கடிதத்தில், மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணனை வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதனிடையே, மாவட்ட வன அதிகாரியால் நியமிக்கப்பட்ட குழுவில் இருப்பவர்கள், குற்றம் சுமத்தப்பட்டுள்ள வன அதிகாரி எஸ். கண்ணனின் பதவிக்கு இணையானவர்களே என்பதால், இந்த விசாரணையில் குறுக்கீடு நடைபெற வாய்ப்பிருப்பதாக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா கருதினார். இதற்காக, கடந்த மாதம் 27-ம் தேதி உதவி வன பாதுகாவலர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என 4 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தீபக் வத்வஸவா நியமித்துள்ளார். இந்தக் குழு தனது விசாரணையை விரைந்து முடிக்கும் என தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்த விசாரணை கமிட்டி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சாட்சிகளிடம் தனது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. எனவே, இந்த மாத இறுதிக்குள் மாவட்ட வன அதிகாரி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை நிறைவடையும் என கோவை மாவட்ட தலைமை வனஅலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது, வேலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரி எஸ். கண்ணனை தேவைப்படும் போது விசாரணைக்கு அழைத்துக் கொள்ளலாம் என அந்த மாவட்ட உயரதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். 

இதேபோல, விசாரணை நடைபெற்று வருவதால் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்காலிகமாக பணிநிறுத்தம் செய்துள்ளதாகவும், அவர் விரும்பினால் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவார் என மாவட்ட தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா உறுதியளித்துள்ளார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...