டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கிராமப்புறங்கள், ஊர்பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மருந்தும் தெளிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. 

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னூரைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த பாலசந்தர் (23), பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அவர்களுக்கு மர்ம காய்ச்சல் தொடர்பான அனைத்து சோதனைகளும் கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...