கோவையில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை: பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிக்கால் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தை சேர்ந்த 144 தொழிலாளர்கள் பகுதி கதவடைப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய சம்பள உயர்வை இழுத்தடித்து வருவதாகவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை சங்கத்தைக் கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் அத்தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். 

பிரிக்கால் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து 15-வது நாளாக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண கோரி, தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...