உதகை தாவரவியல் பூங்கா அருகே உலாவும் காட்டெருமை : விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்

கோவை: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமை, தற்போது தாவரவியல் பூங்கா அருகே சுற்றுத் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


கோவை: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமை, தற்போது தாவரவியல் பூங்கா அருகே சுற்றுத் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

உதகை கமர்சியல் சாலையில் நேற்று (திங்கட்கிழமை) புகுந்த ஒற்றை காட்டெருமை அங்குள்ள நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்தது. பகல் நேரம் என்பதாலும் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதாலும் அதனை விரட்டாமல் அதை அங்கேயே இருக்கும் படி பார்த்துக் கொண்டனர். இருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து, 

கடந்த 14 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்த காட்டெருமை இரவு நேரம் விரட்டப்பட்டது. அங்கிருந்து ஓடிய காட்டெருமை தாவரவியல் பூங்கா அருகில் உள்ள கோடப்மந்த் சோலைக்குள் புகுந்தது. இந்த இடம் தாவரவியல் பூங்காவிற்கு மிக அருகில் இருப்பதால் இந்த காட்டெருமை தொடர்ந்து பூங்கா அருகில் சுற்றி வருகிறது.

இன்னும் சில நாட்களில் உதகையில் இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில் இந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...